இந்தியாவில் ஒரு நாளில் 1.54 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது.
20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 13.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசி சோதனைகள் இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் 15,19,486 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment