2021-2022ம் கல்வியாண்டிற்கு தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகள் விவரம் அனுப்ப உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 16, 2021

2021-2022ம் கல்வியாண்டிற்கு தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகள் விவரம் அனுப்ப உத்தரவு

2021-2022ம் கல்வியாண்டிற்கு தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகள் விவரம் அனுப்ப உத்தரவு






2021-2022ம் கல்வியாண்டிற்கு தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகள் விவரம் அனுப்ப உத்தரவு
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பள்ளிகள் குறித்த விவ ரம் அனுப்ப, சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை
 கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களின் எண் ணிக்கை மற்றும் தேவைக்கு ஏற்ப ஆண்டு தோறும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, வரும் 2021-2022ம் கல்வியாண்டிற்கு தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகு திவாய்ந்த பள்ளிகளின் பட் டியலை அனுப்ப, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவி டப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டிய நடுநிலைப்பள்ளி, மேல்நிலை யாக உயர்த்த வேண்டிய உயர் நிலைப்பள்ளிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும்.

அத்துடன், தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளில் உள்ள நிலப்ப ரப்பு மற்றும் இதர தகுதிகளை பரிசீலித்து அதுசார்ந்த கருத்துருக்களையும், எந்தவித புகா ருக்கும் இடமளிக்காத வகையில் அனுப்பிவைக்க வேண்டும், என சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  TAMIL BOOKS PDF    இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!



No comments:

Post a Comment

Post Top Ad