ஏப்ரல் 21-ல் PF ஓய்வூதியர் களுக்கான குறைதீர்வு கூட்டம் - பங்கேற்கச் செய்ய வேண்டியது என்ன?
சென்னை வடக்கு மற்றும் தெற்கு பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.எஃப்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீர்ப்பு கூட்டம் 2021, ஏப்ரல்-21-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் (Employees' Provident Fund Regional Office,Chennai) சார்பாக பிற்பகல் 2.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெற உத்தரவு பெற்றவர்கள் ஏப்ரல்-21-ம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதில் தங்களுக்கு உள்ள சிக்கல்கள் மற்றும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களது குறைகள் குறித்த விவரங்களுடன், பெயர், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைப்பேசி மற்றும் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை நேரில் அல்லது pension.rochn1@epfindia.gov.in என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 16-ம் தேதிக்குள் இதைச் செய்ய வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைப்பு, மின்னஞ்சல் மூலமாக அளிக்கப்படும்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment