நிறுத்தி வைக்கப்பட்ட 'ரிசல்ட்' 2 வாரத்தில் வெளியிட திட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 21, 2021

நிறுத்தி வைக்கப்பட்ட 'ரிசல்ட்' 2 வாரத்தில் வெளியிட திட்டம்

நிறுத்தி வைக்கப்பட்ட 'ரிசல்ட்' 2 வாரத்தில் வெளியிட திட்டம்


                                                  
       

தேர்வு முறைகேடு சமிக்ஞைகளை ஆய்வு செய்த பின், நிறுத்தி வைக்கப்பட்ட இன்ஜினியரிங் தேர்வு முடிவுகளை, இரண்டு வாரங்களுக்குள் வெளியிட, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. 



தமிழகம் முழுதும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்துடன் இயங்கி வருகின்றன.இவற்றில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, 400க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் மாணவ, மாணவியருக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


 
 நடப்பு கல்வி ஆண்டில், டிசம்பரில் நடத்த வேண்டிய தேர்வுகள், பிப்ரவரியில் நடத்தப்பட்டன. ஆன்லைன் வழியில், சிறப்பு சாப்ட்வேரை பயன்படுத்தி, மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் வகையில், இந்த செமஸ்டர் தேர்வுகள் அமைக்கப்பட்டன.தேர்வின் போது, மாணவர்கள் வேறு பக்கம் திரும்பினாலோ, புத்தகங்களை பார்த்து எழுதினாலோ, அவர்கள் கேமராவால் தானியங்கி முறையில் அடையாளம் காணப்பட்டு முறைகேடு செய்ததாக, கணக்கில் எடுக்கப்பட்டது. 

 இந்நிலையில், இந்த தேர்வின் முடிவுகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதன்படி, 30 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். மற்றவர்களில், 40 சதவீதம் பேர் வரையிலான தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் தரப்பில், அண்ணா பல்கலைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் லேசாக கண்களை திருப்பினாலும், அது சாப்ட்வேரில் பதிவாகி தேர்வு முடிவை மாற்றி விடுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், நிறுத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் அதற்கான கேமரா பதிவுகள் குறித்து, அண்ணா பல்கலையின் தேர்வு துறை சார்பில், விசாரணை துவங்கியுள்ளது. 


 
 இது குறித்து, பல்கலை அதிகாரிகள் கூறியதாவது:முடிவுகள் நிறுத்தப்பட்ட மாணவர்களின், தேர்வு தொடர்பான ஆன்லைன் பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. யாராவது உண்மையில் முறைகேட்டில் ஈடுபட்டார்களா அல்லது ஆன்லைன் முறை பிரச்னையால், அவர்களின் விபரங்கள் சாப்ட்வேரில் பதிவாகியுள்ளதா என, ஆய்வு செய்கிறோம்.இந்த ஆய்வுகள் இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட்டு, அதன்பின், அனைவரது தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad