
மே 3ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 2 தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம்
வாக்கு எண்ணிக்கை நடப்பதை அடுத்து மே 3ம் தேதி நடக்க இருந்த மொழிப்பாடத் தேர்வு ஒன்று மட்டும் மே 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. 9 மாத விடுமுறைக்கு பின்னர் 2021 ஜனவரி மாதம் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கப்பட்டது. தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடப்பதால், மே 3ம் தேதி நடப்பதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31ம் தேதி நடக்கும். மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் நடக்கும். மேலும், தேர்வு நடக்கும்போது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment