
தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு ஏப்ரல் 14ம் தேதி தொடக்கம்!
தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு நாளை (14ம் தேதி) தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் சலாஹூத்தீன் முகம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.
ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பது எப்படி? முழு விளக்கம்:
இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்று ரம்ஜான் நோன்பு.
ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள். இந்நிலையில் இந்த ரமலான் நோன்பு நாளை முதல் அதாவது ஏப்ரல் 14ம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. ரமலான் மாதத்திற்கான பிறை நேற்று (13ம் தேதி) தென்படாததால் ஏப்ரல் 14ம் தேதி இரவு முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் சலாஹூத்தீன் முகம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.
இதன் படி ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என தலைமை காஜி டாக்டர் சலாஹூத்தீன் முகம்மத் அய்யூப் தெரிவித்துள்ளார்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment