ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணி தொடக்கம்

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொது செய்முறைத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியை வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து, மாணவ - மாணவியருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தேர்வு நாளில் வந்தால்போதும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு மேல் விடுப்பு அறிவிக்கப் பட்டாலும், வழக்கமான மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான, அரசின் திட்ட பணிகள் வழங்கலாமா என்பது குறித்து, நிதித்துறையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.இது குறித்து, சுகாதார துறையுடன் பேசி, விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment