ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் தற்பொழுது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணி தொடங்கியுள்ளது - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, April 15, 2021

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் தற்பொழுது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணி தொடங்கியுள்ளது

         Norms Thrown to Winds in Transfer of Teachers in Tamil Nadu | NewsClick

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் தற்பொழுது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணி தொடங்கியுள்ளது

நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் | சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :


கொரோனா பரவ லால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது . எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்வி சார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன் விவரங்களை வாங்கி வைத்து , பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும் , சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் இணையதளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  TAMIL BOOKS PDF    இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!



No comments:

Post a Comment

Post Top Ad