கொரோனா பரவலால் மீண்டும் மாணவர்களின் கல்வி பாதிப்பு.
கொரோனாவால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதேபோல், கல்வித்துறையும் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் திடீர் ஆன்லைன் கல்வி திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சவாலை சந்தித்தனர். ஆன்ட்ராய்டு செல்போனும், இணைய வசதியும் இல்லாத மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment