அரசு பள்ளியில் கட்டட வசதி தேவைப்பட்டியல் சேகரிப்பு

அரசு பள்ளிகளில், வகுப்பறை உள்ளிட்ட கட்டட தேவை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
2021 - 22க்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடுக்கு, விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை கட்டடம், கட்டட சீரமைப்பு உள்ளிட்ட கட்டுமானப் பணி தேவை குறித்து, விபரம் சேகரிக்கப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேவைப்படும் கட்டட விபரம், இடவசதி உள்ளிட்டவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment