ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை:பிளஸ் 2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா அதிகம்பரவுவதால் அவர்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் பாதிப்புடன் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அவர்களின் நலன் கருதியும் தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள்வரையிலான ஆசிரியர்களுக்கு கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் கோடை விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment