பெருநகர சென்னை மாநகராட்சி தற்காலிக பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, April 29, 2021

பெருநகர சென்னை மாநகராட்சி தற்காலிக பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி தற்காலிக பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தற்காலிகமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிகமாக மருத்துவ அலுவலர்கள் (Medical Officer) மற்றும் செவிலியர் (Staff Nurse) பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய கல்வி தகுதி அசல் சான்றிதழுடன் 29.04.2021 மற்றும் 30.04.2021 (காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை) நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு வருட கால பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

கல்வி தகுதி: 


மருத்துவ அலுவலர்கள் (Medical Officer) பணிக்கு MBBS படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
செவிலியர் (Staff Nurse) பணிக்கு DGNM (Diploma in General Nursing Midwives) படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் நடைபெறும் தேதி:


29.04.2021 & 30.04.2021 (காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை).

நேர்காணல் நடைபெறும் இடம்:-

உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர், 
சென்னை மாநகர நல சங்கம், பொதுசுகாரத்துறை.
பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை – 600003No comments:

Post a Comment

Post Top Ad