பொது முடக்க அமலை தவிர்க்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி
தற்போது இந்தியாவில் கரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் கரோனா தடுப்பு விதிமுறைகளை ஒவ்வொரும் கடைப்பிடித்தால் பொது முடக்கம் என்பது இறுதி வாய்ப்பாக தான் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார், பிரதமர் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை இரவு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய யுத்தத்தில் இந்தியா மீண்டும் ஈடுபட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் நாட்டில் கரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஸ்திரமாக இருந்தது. அதன்பின்னர் அந்தத் தொற்றின் இரண்டாம் அலை உருவானது. தற்போது நாடு கரோனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை: கரோனா தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள சவால் மிகப் பெரியது. அதனை நமது உறுதி, தீரம், ஆயத்த நடவடிக்கைகளால் கடந்து வர வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைப்படும் அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment