அறிந்து கொள்வோம்!! - நில அளவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

அறிந்து கொள்வோம்!! - நில அளவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

அறிந்து கொள்வோம்!! - நில அளவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!



சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.



* சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது. 


 
1. நில அளவை துறை

 2. நில வரிதிட்ட துறை

* புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நிலஅளவை துறையினரால் தயாரிக்கப்படுகிறது. 

* 'அ' பதிவேடு (A Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது. 

* மாநில அரசின் நில அளவைகளை நகர நில அளவை, நத்தம் நில அளவை, மலை கிராம் நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள்தோறும் நடைபெறும் மாறுதல் சம்மந்தமான நில அளவைகள்  என பிரிக்கப்படுகிறது.

1. கிராம வரைபடம்.

 2. D ஸ்கெட்ச் (நன்செய், புன்செய்,  சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் மானாவாரி, நத்தம், புறம்போக்கு அமைக்கும் போதும், சர்வே புலத்தில் பகுதிகளைப் பிரித்து காட்டும் வரைபடம்).  

 3. புலப்படம் 

4. சர்வே கற்கள் பதிவேடு,

5. டிப்போ பதிவேடு (கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை   சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும்  டிப்போ) போன்ற ஆவணங்கள் கிராம நிலபுறம்போக்காக மாறும் பொழுதும் அளவையில் இருக்கும்.

 ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வேநிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி செய்து போடப்பட்ட கற்களைப் பராமரிக்க வேண்டும்.எல்லை கல்லைப் பாதுகாப்பது, அந்தக் கல் தொட்டுக் கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதாரரின் கூட்டுப் பொறுப்பு ஆகும்.

மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள், கோவில்கள்  விளக்கிக் காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள்.

எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்.?


 
1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும்பொழுது இறுதியாக 1984ல் இருந்து 1987வரை நடந்தது.

2.பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது இறுதியாக 1990களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே  புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தில் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும், 

4. கிராம வரைபடம் வரையும் போது, திருத்தம் கண்டுபிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்,

 5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல்,புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும் 

 6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது, 

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை உருவப்பிழை பட்டாதாரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுதும்,

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய  சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை  சர்வே செய்யப்படும்.


 
 சர்வே புல வரைபடத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள். 

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள்,உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் (FIELD BOUNDARY LINE).

 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர். 

4. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப்பிடிப்பர்.

 5. மீட்டர் கணக்கில் தான் FMB யில் நிலத்தின்அளவுகளை எழுதுவார்கள்.

 6. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1 : 5000 என்றும் கொஞ்சம் குறைவாக இருப்பின் 1 : 2000 என்றும், மிக சிறிய நிலமாக இருந்தால் 1 : 1000 என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி... 

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள் ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மூன்று அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
 
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள்:குழி, மா, வேலி, காணி, மரக்கா
2. பிரிட்டிஷ் வழக்கு அளவீடுகள் : சதுர அடி,சென்ட், ஏக்கர் போன்றவை 
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : சதுர மீட்டர்,ஏர்ஸ், ஹெக்டேர் 

பாரம்பரிய வழக்கம்:   

 
நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்ட போது நில நிர்வாகத்தை 90 சதவீதம் அவர்கள் உருவாக்கியதால் அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் என்ற நோக்கில் மெட்ரிக் அளவு முறையும் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றோம்.
இன்றைக்கும் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யப்படுகிறது. * கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும்,சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது. 
 நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஷ்m அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன. 

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

 *40.5 சதுர மீட்டர் - 1 சென்ட்
 * 222.95 சதுர மீட்டர் -1 கிரவுண்ட்
 * 1 சதுரமீட்டர் - 10.76391  சதுர அடி 
 * 0.0929 சதுரட்ட்ட ர் - 1 சதுர அடி
* 100 சதுர மீட்டர் - 1 ஏர்ஸ் 

செயின்

* 1 செயின் - 65 அடி 
* 1 செயின் - 100லிங்க் 
 * 10 செயின் - 1 பர்லாங்கு
*1 செயின் - 22 கெஜம்

 எல்லை கற்கள்:


 
நிலப்பகுதிகளை முறையாக அளந்து, அவற்றின் எல்லைகளை, நில அளவைத் துறை நிர்ணயம் செய்கிறது. குறிப்பிட்ட நிலத்தின் சிறு பகுதியை அதன் உரிமையாளர், இன்னொருவருக்கு அளிப்பது, நிலம் ஒப்படைப்பு, நிலம் எடுப்பு: நிலம் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களுக்கு நிலம் தேவைப்படும் நிலையில், நிலம் அளவீடு செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு அளந்து எல்லைகளை வரையறை செய்து கொள்ள நில உரிமையாளர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.  

  அதனையடுத்து - தாலுக்கா அலுவலக உத்தரவின் அடிப்படையில் சர்வேயர் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் அளக்கப்பட்டு தக்க இடங்களில் கற்கள் நடப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்படும். 

ஏக்கர்

* 1 ஏக்கர் - 43,560 சதுர அடிகள் 
*  1 ஏக்கர் - 100 சென்ட் -
*  1 ஏக்கர் - 40-45.82 சதுர மீட்டர் 
* 2 ஏக்கர் - 47 சென்ட் 1 ஹெக்டேர்
* 1.32 ஏக்கர் -1 காணி
* 640 ஏக்கர் - 1சதுர  மைல் 
* 1 ஏக்கர் - 40.5 ஏர்ஸ் 

ஏர்ஸ் 

* 10 ஏர்ஸ் - 02471 சென்ட்
* 1 ஏர்ஸ் - 1076 சதுர  அடி
* 1  ஏர்ஸ் - 247 சென்ட் 
 * 1  ஏர்ஸ் - 100 சமீ 
 * 100  ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
 * 0.405  ஏர்ஸ் - 1 சென்ட் 

புலப்படத்திலுள்ள விவரங்கள்


 
எப்.எம்.பி(FMB). என்ற புலப்படத்தின் மேல்பகுதியில் மனை அல்லது இடம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், வருவாய் வட்ட வரிசை எண்கள், வருவாய் கிராம பெயர், புல எண்ணின் மொத்தப் பரப்பு, வரைவு செய்யப்பட்ட அளவு திட்டம் போன்ற விவங்கள் இருக்கும். நிலத்தின் உரிமையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில், அனைவர் பெயரும், உட்பிரிவு எண்களோடு சொல்லப்பட்டிருக்கும். நிலத்தின் உரிமையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில், அனைவர் பெயரும், உட்பிரிவு எண்களோடு சொல்லப்பட்டிருக்கும். நிலத்தின் அனைத்து எல்லைகள், வளைவு பகுதிகளில் நடப்பட்டுள்ள சாவே கற்கள் பாதுகாப்பு, சீர்படுத்துதல் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்பது ஆகியவை, சம்மந்தப்பட்ட நில உரிமையாளின் கடமைகாள தமிழ்நாடு நில அளவை எல்லைகள் சட்டம் 1923, பிரிவில்  சொல்லப்பட்டுள்ளது.
 
ஹெக்டேர்

*  1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
* 1 ஹெக்டேர் - 10,000 சமீ  
* 1 ஹெக்டேர் - 100 ஏர்ஸ் 
*  0040 ஹெக்டேர் - 1 சென்ட் 
*  1 ஹெக்டேர் - 247 சென்ட் 
* 1 ஹெக்டேர் - 107637.8 சதுர அடிகள்
* 0.405 ஹெக்டேர் -1 ஏக்கர்

 சென்ட்

 * 1 சென்ட் - 435 சதுர அடிகள்
 *  1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
 * 1 சென்ட் - 0040 ஹெக்டேர்  
 * 1 சென்ட் - 0.405 ஏர்ஸ் 
 * 1 சென்ட் - 40.45 சதுரமீட்டர்
 * 247 சென்ட் - 1 ஏர்ஸ் 
 * 5.5 சென்ட் - 2400 சதுர அடிகள்
 * 5.5 சென்ட் - 1 மனை
 * 11.0 சென்ட் - 4800 சதுர அடிகள் 
 * 11.0 சென்ட் - 2 மனை
 * 56 சென்ட் - 1 குருக்கள்
 * 56 சென்ட் - 24,000 சதுர அடிகள் 
 * 2.47 சென்ட் - 1076 சதுர அடிகள்
 * 4.7 சென்ட் - 1 வீசம்

அளவுகள் சரிபார்த்தல் : 

புதிய மனைப்பிரிவு அமைப்பு அல்லது நிலம் விற்பனை ஆகிய நிலைகளில் சம்பந்தப்பட்ட நிலப்பரப்பு சர்வே செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் புதியதாக நடப்படும். அவ்வாறு, நிலத்தின் நான்கு முனைகளிலும் கற்கள் நடப்பட்டுள்ள மனை அல்லது இடத்தின் அளவு சரியாக அளக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

 எல்லைக் கற்கள் நடப்பட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையிலும், இடத்தின் உரிமையாளர் அப்பகுதிக்கு நேரில் சென்று பராமரிப்புகள் செய்யாததாலும் எல்லைக் கற்கள் காணாமல் போய் விடலாம்.
 இடம் அல்லது மனையின் சரியான எல்லைகள் தெரியாத நிலையில் அதன் உரிமையாளர் விற்பனை அல்லது கட்டுமானப் பணி ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் குழப்பம் ஏற்படும்.

நிலம் தொடர்பான சீரமைப்பு நடவடிக்கை:

 குறிப்பிட்ட இடம் அல்லது மனைப்பகுதிகள் சர்வே செய்யப்படும்போது அதன் பரப்பளவில் வேறுபாடு இருப்பது, மனை அல்லது நிலம் மற்றும் அதன் எப்.எம்.பி. வரைபடம் ஆகியவற்றுக்கிடையே குறிப்பிட்ட அளவுக்கும் மேலான அளவு வித்தியாசம் இருப்பது, நிலம் அல்லது மனையில் ஆக்கிரமிப்பு ஏதாவது செய்யப்பட்டிருப்பது ஆகிய நிலைகளில் உரிய ஆதார ஆவணங்களை இணைத்து வட்டாட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம்.

தெரிந்து கொள்வோம்! அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?

 குறிப்பாக, அளவுக் கற்கள், நிலத்தின் முச்சந்தி கற்கள் ஆகியவை இல்லாதது. நன்செய், புன்செய் நிலம் ஆகியவற்றின் மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள விவர வேறுபாட்டு சிக்கல் ஆகியவை பற்றி நில அளவையாளர் மற்றும் வருவாய் அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்து சீர் செய்து கொள்ளலாம்.

   ஆதாரம்: தமிழ்நாடு நுகர்வோர் கவசம்




FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad