அறிந்து கொள்வோம் - மாவட்ட தொழில் மையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

அறிந்து கொள்வோம் - மாவட்ட தொழில் மையம்

அறிந்து கொள்வோம் - மாவட்ட தொழில் மையம்



மாவட்ட தொழில் மையத்தின் பணிகள்
ஊராட்சி ஒன்றிய அளவில் மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முகாம் நடத்துதல்.
தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
உத்யோக் ஆதார் மெமோரண்டம் பதிவு செய்தல்.
குடிசைத் தொழில் சான்று வழங்குதல்.
கைவினை தொழில் சான்று வழங்குதல்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008 ன்படி தொழில் நிறுவனங்களுக்கு 25% மூலதன மானியம் 30.00 இலட்சம் வரை மானியங்கள் வழங்குதல்.
மின்னாக்கி மானியம் 25ரூ 320 முஏஹ வரை ரூ.5.00 இலட்சம் வழங்குதல்.
குழுமத் தொழில் வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளை கண்டறிந்து, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புதலுக்கு பரிந்துரைத்தல், ஒப்புதல் வழங்கப்பெற்ற திட்டங்களை நடைமுறைபடுத்துதல்.
அரசினால் குறிப்பிடப்பட்டுள்ள 15 வகையான மின்சாதன வீட்டு உபயோகப் பொருட்கள் இந்திய தரச்சான்று அடிப்படையில் உள்ளனவா என கண்டறிதல்.
ஒருமுனை தீர்வுக்குழுவின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உரிமங்களை பெற்று தருதல்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்து கடன் வசதி பெற்று தருதல்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்து கடன் வசதி பெற்று தருதல் (NEEDS)
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்து கடன் வசதி பெற்று தருதல் (PMEGP)
மாவட்ட அளவில் தொழில் முனைவோர் கருத்தரங்கு நடத்துதல்.
மாநில மற்றும் மத்திய அரசின் சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்தல்
புதிய தொழிற்கூட்டுறவு சங்கங்கள் அமைக்கும் நடவடிக்கைகள்.
நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து புனரமைக்க ஏற்பாடு செய்தல்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாராக்கடன் பிரச்சனைகளை கண்டறிந்து வசதியாக்க குழு மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் / உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடனாக ரூ.10 இலட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 இலட்சமும் மற்றும் வியாபாரத்திற்கு ரூ.1 இலட்சமும் வங்கிகள் மூலமாக 25ரூ மானியத்துடன் கடனாக வழங்கப்படும். நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
கடன் பெறுவோரில் பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10ரூ பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும். ஏனைய பிரிவினர்களாகிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் திட்ட முதலீட்டில் 5ரூ பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும். எஞ்சிய தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவத்துடன் திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (GST Number கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம்” (NEEDS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இளங்கலை /முதுகலை பட்டய படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ), ஐ.டி.ஐ, / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% (அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 21க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதமில்லை.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சத்திற்கு மேல், அதிகபட்சமாக ரூ.100.00 இலட்சம் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் துவங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 % செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (PMEGP)
சிறப்பம்சங்கள்:
உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 இலட்ச ரூபாய் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம் வரையிலும் திட்டத்தின் அளவு அனுமதிக்கப்படும்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
வருமான வரம்பில்லை.
ரூ.5 .00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு சொத்து பிணையம் தேவையில்லை.
உற்பத்தி சார்ந்த தொழிலில் ரூ.10.00 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை சார்ந்த தொழிலில் ரூ.5.00 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
திட்ட மதிப்பீட்டில் ரூபாய். 1.00 இலட்சத்திற்கு குறைந்த பட்சம் ஒருவர் என்ற வீதத்தில் மொத்த திட்ட முதலீட்டிற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பளித்தல் கட்டாயமாகும். கூடுதலாக வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வங்கிகள் பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அளவிலும், நலிவடைந்த பிரிவினருக்கு 95 சதவீதம் அளவிலும் கடன் ஒப்பளிப்பு செய்து, இரண்டு வார தொழில் முனைவோர் பயிற்சி முடித்தவருக்கு பணம் பட்டுவாடா செய்யும். பயிற்சி இன்றி வங்கிகள் பணம் பட்டுவாடா செய்யும் பட்சத்தில் மானியம் பெற இயலாது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் virudhunagar.nic.in





FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad