TNPSC.யில் 20% இடஒதுக்கீடு - அதிரடி உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 16, 2021

TNPSC.யில் 20% இடஒதுக்கீடு - அதிரடி உத்தரவு


TNPSC.யில் 20% இடஒதுக்கீடு - அதிரடி உத்தரவு

தமிழகத்த்தில், தேர்தல் திருவிழா வரவிருக்கும் அக்னி வெய்யிலுக்கு முன்னோட்டமாக அனல் பறக்கும் அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களினால் சூடு பிடித்துள்ளது. இரு திராவிட கட்சிகளும், போக்குவரத்தில் பெண்களுக்கு சலுகைகள், மாதந்தோறும் ஊக்கத்தொகை என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு சேகரித்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் தமிழ் மொழி வழியாக  மட்டுமே பயின்று வரும் மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இப்படி 12ம் வகுப்பு வரையில் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு இறுதியில் சான்றிதழ்களை வழங்கும் போது அதைக் குறிப்பிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் வழியில் தங்களது பள்ளி இறுதியை முடிக்கும் மாணவர்கள் இனி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அதிகளவில் பயன்பெறுவார்கள். தமிழக கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் இதன் மூலம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC PSTM பற்றிய முழு விளக்கம் & PSTM CERTIFICATE NEW FORMAT PDF:CHECK HERE

No comments:

Post a Comment

Post Top Ad