அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு "Work From Home! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, April 15, 2021

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு "Work From Home!

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு "Work From Home!



தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முடியும் என்றால் தாமாகவே முன்வந்து வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சில நாட்களாக கொரோனா அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

இருப்பினும் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது.இதனடிப்படையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் யாரெல்லாம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அந்த நிறுவனங்கள் "வொர்க் பிரம் ஹோம்" முறையை நடைமுறைப்படுத்தலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  TAMIL BOOKS PDF    இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!



No comments:

Post a Comment

Post Top Ad