இன்றைய ராசிபலன் (12 மே 2021) - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 11, 2021

இன்றைய ராசிபலன் (12 மே 2021)

மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் மன நிம்மதி கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும் பெண்களுக்கு சிறந்த நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் வார்த்தையில் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறந்த ஓய்வு நாளாக இன்று இருக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை இன்று அனுகூலம் ஆகும்

ரிஷபம்

அன்பர்களுக்கு நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் தென்படும்.

காதல் வயப்பட்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள் வீட்டில் உங்கள் காதல் சம்பந்தமாக பேசுவதற்கு உகந்த நாள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வித் திறன் பளிச்சிடும் உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு தொல்லைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகளால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை.

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள் உணவு தொழில் சுற்றுலா தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள்மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு மாற்றத்துக்கான அடிப்படையான விஷயங்கள் இன்று நடைபெற வாய்ப்பு உள்ளது

மிதுனம்


நண்பர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு சற்று அழுத்தத்தைக் கொடுப்பது கல்வி நிலையை மேம்படுத்தும். சந்தோஷம் உண்டு. வழக்கு வகைகளில் வெற்றியடைவீர்கள் .

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் திறம்பட சமாளிக்கும் நல்ல நாள் ஆகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கோபத்தை குறைத்து குணத்தை அதிகப் படுத்திக் கொள்ளவும்.

வேலை மாற்றத்தை நோக்கி இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெற்றி காண்பார்கள். திட்டமிட்டபடி குடும்பத்துடன் வெளியே சென்று வருவது தாமதமாகலாம் அல்லது தடையாகலாம். எனவே கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து விலகும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

நண்பர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாள் ஆகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவார்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளித்து குடும்ப அமைதியை நிலை நாட்டுவார்கள் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

சட்டென உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை ஏற்படும் என்பதால் நிதானத்தையும் பேச்சில் கவனத்தையும் கொள்ளவும் வயதானவர்களுக்கு சிறிய அளவில் உடல் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போவதுடன் பணிச்சுமையும் கூடுதலாக இருக்கும் ஆனால் இவைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.

ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும் என்பதால் உணவுப் பொருட்களில் சற்று கவனமாக இருக்கவும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு.



சேவைத் தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்கள் சற்று கூடுதலான பணிச்சுமையை சுமக்க வேண்டி வந்தாலும் அவற்றால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அல்லது ஊதிய உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் தென்படும்.


கன்னி


நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் ஆராய்ச்சிகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் சொத்துக்கள் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் திட்டங்கள் போன்றவை மனதில் உருவாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவனும் மனைவியும் பிரயாணங்கள் செய்வதற்கு வாய்ப்பு உண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமடைவீர்கள் புதிய தொழில் விருத்தி அடையும் வயதானவர்களுக்கு உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும்.

துலாம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவும் உண்டாக வாய்ப்பு உள்ளது சற்று கவனம் தேவை.

கோபத்தை குறைத்துக் கொள்ளவும் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும் குடும்ப ஒற்றுமை பிற்பகலுக்கு மேல் நன்றாக இருக்கும் பற்றாக்குறையை சமாளிக்க சிரமப்படுவீர்கள் என்றாலும் வெற்றி கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறையும் மன அழுத்தமும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்


அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல உறவுகள் நெருங்கி வருவதற்கான நல்ல நாள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியில் சென்றுவர வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்கள் வெற்றி தருவதாக அமையும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிறப்பான ஓய்வு கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் சிலருக்கு பிரயாணம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு இவைகளால் ஆதாயமும் உண்டு.

தனுசு


நேயர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் வயதில் மூத்தவர்களை சந்தித்தல் குருமார்களை சந்தித்தல் போன்ற காரியங்களில் அல்லது அது சம்பந்தப்பட்ட எண்ணங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிக்கான பெறக்கூடிய நல்ல நாள் ஆகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனமகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேலை சற்று காலதாமதமாகும்.

மகரம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள் ஆகும். விருந்தினர் அல்லது உறவினர் வருகை உண்டு. இவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் இவர்கள் வெற்றி அடைவார்கள்.

வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய்நாட்டைப் பற்றிய சிந்தனை கூடுதலாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் அமைதி தவழும் வீட்டில் உள்ள மூத்தவர்கள் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் ஆகும்.

கும்பம்


ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கும் மேல்நிலைக்கல்வியில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் இவைகள் உங்கள் கை வந்து சேர வாய்ப்புகள் உண்டு.



புதிய தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.



வெளிநாடுகளில் இருக்கும் ஒரு சிலருக்கு தாய்நாடு திரும்ப வாய்ப்புகள் உண்டாகும். விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிரயாணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டு.

மீனம்


நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உத்தியோகத்திலும் தொழில் துறையிலும் தேவையான அளவில் உதவி செய்வார்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும் .

உங்கள் பிரயாணங்கள் வெற்றியடையும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் ஆதாயம் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றியடைவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கும்.

மாணவர்கள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இனிய தகவல்கள் வந்து சேரும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad