மே 15 வரை அனைத்து பள்ளிகளும் மூடல், ஆன்லைன் வகுப்புகள் ரத்து - உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

மே 15 வரை அனைத்து பள்ளிகளும் மூடல், ஆன்லைன் வகுப்புகள் ரத்து - உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!!

மே 15 வரை அனைத்து பள்ளிகளும் மூடல், ஆன்லைன் வகுப்புகள் ரத்து - உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!!



உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக வரும் மே 15ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்:


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக வீரியத்தில் உள்ளது. இதனால் பல மாநிலங்களும் முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாட்டில் நடக்க இருந்த பல முக்கிய தேர்வுகளும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 15ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும் மேலும், ஆன்லைன் வகுப்பு ஏதும் அந்த சமயங்களில் நடத்தப்படக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச உயர் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள எந்த பயிற்சி மையங்களும் இந்த நேரத்தில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் பள்ளிக்கு எந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களும் வரக்கூடாது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad