பிளஸ் 2 தேர்வு ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 1, 2021

பிளஸ் 2 தேர்வு ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் 3-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் மறுநாள் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

5-ந் தேதியில் இருந்து தேர்வு தொடங்குவதாக இருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைபடி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது செய்முறை தேர்வு மட்டும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் ஜூன் மாதம் வரை அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வை ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மே மாதத்திற்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு விடலாம் என்பதால் தொற்றின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இல்லை.

அதனால் ஜூலை மாதத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடித்து விட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேர்விற்கு அதிக கால இடைவெளி கொடுக்காமல் தேவையான அளவு மட்டும் கொடுத்து தேர்வை நடத்திடவும் அதனை தொடர்ந்து 2 வாரத்தில் தேர்வு முடிவை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு நடந்து முடிந்த பிறகு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் வினாத்தாள் தாமதமாக திருத்தப்பட்டு தேர்வு முடிவும் தாமதமாக வெளியானது.

ஆனால் இந்த வருடம் தேர்வு 3 மாதங்கள் தள்ளி போகிறது. முடிவு வருவதற்கு மேலும் 2 மாதம் ஆகும். மேலும் செய்முறை தேர்வு மாணவர்கள் தவிர பிற மாணவ-மாணவிகள் வகுப்புக்கு வரத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad