6ம் தேதி முதல் கடைகள் அடைப்பு மளிகை, காய்கறி மட்டும் அனுமதி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

6ம் தேதி முதல் கடைகள் அடைப்பு மளிகை, காய்கறி மட்டும் அனுமதி

6ம் தேதி முதல் கடைகள் அடைப்பு மளிகை, காய்கறி மட்டும் அனுமதி

மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும், 6ம் தேதி முதல், திறக்க தடை விதிக்கப்படுகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, மே 1 முதல், மறு உத்தரவு வரும் வரை, இரவு, 10:00 முதல், அதிகாலை, 4:00 மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்நிலையில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், நாளை மறுதினம், 6ம் தேதி அதிகாலை, 4:00 முதல், 20ம் தேதி காலை, 4:00 மணி வரை, புதிய கட்டுப்பாடுகளை, நேற்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அதன் விபரம்:


latest tamil news





latest tamil news


*அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது பயணியர், மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை டாக்சி ஆகியவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது

* வணிக வளாகங்களில் இயங்கும், பல சரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகச் செயல்படும் மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

* மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

* மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து உணவகங்களிலும், 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை மட்டுமே செயல்படலாம்.

* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது .

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

* ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி ஊரக பகுதிகளில் உள்ள, அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* சனிக் கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* இது தவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடரும்.இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad