7,000 மாங்கனிகளால் கோயிலில் அலங்காரம்; கடைசியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

7,000 மாங்கனிகளால் கோயிலில் அலங்காரம்; கடைசியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

7,000 மாங்கனிகளால் கோயிலில் அலங்காரம்; கடைசியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!


மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் வித்தல்-ருக்மணி என்ற கோயில் அமைந்துள்ளது. நேற்று அட்சய திருதியை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கோயில் முழுவதும் 7,000 மாங்கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவை அல்போன்சா வகையைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கக் கூடியது.

இவற்றை புனேவை சேர்ந்த தொழிலதிபர் ஏபிபி மாஜா நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. மூலவர்களான வித்தல் மற்றும் ருக்மணி சாமி சிலைகளும் மாங்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதுபோன்ற வழக்கத்தை ஆண்டுதோறும் கடைபிடித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்புகளை மகாராஷ்டிர மாநிலம் கொண்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த சூழலில் வித்தல்-ருக்மணி கோயிலில் பக்தர்களின்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அனைத்து பழங்களையும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளனர். கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் பழங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சூழலில் கோயிலில் இருந்து வழங்கப்பட்ட மாங்கனிகளால் ஏராளமானோர் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 3,100 மாங்கனிகளை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். இவற்றை ரத்னகிரியில் இருந்து பிரத்யேகமாக ஆர்டர் செய்து வரவழைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad