ஆக்சிஜன் இருப்பு நிலவரம்... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

ஆக்சிஜன் இருப்பு நிலவரம்... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அதிரடி உத்தரவு!

ஆக்சிஜன் இருப்பு நிலவரம்... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அதிரடி உத்தரவு!


கொரோனா உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்சிஜன் இருப்பு விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தற்காலிக ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் சித்தா மையங்களில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன.

இதனால் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் சில இடங்களில் திறந்தவெளியில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடைசி நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லை எனக் கூறி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் 2, 149 படுக்கைகளில் நோயாளிகள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இவற்றில் சுமார் 400 படுக்கைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தற்போது வேகமாக பரவி வருவதால் 90% படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மருத்துவமனைகளும், சுகாதாரத் துறையும் இணைத்து தனிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad