பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு - தமிழக அரசு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 11, 2021

பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு - தமிழக அரசு...

பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு - தமிழக அரசு...

பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு.



கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டருக்கு மறு தேர்வு.



முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.



செய்தி வெளியீடு எண் : 028, நாள் : 10.05.2021 



செய்திக் குறிப்பு 



சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் | டிசம்பர் 2020 க்குண்டான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக ( Proctored Online Examination ) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர் . இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும் , நன்குப் படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் , மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள் . 







1 பிப்ரவரி 2021 - இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் . 



2. இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை . 



3 . பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம் . 



4 . தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக ( Online Examination ) நடைபெறும் . பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும் . இத்தேர்வுகள் , தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும் .



 5 . எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும் . பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும் . அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் . மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

No comments:

Post a Comment

Post Top Ad