வேலம்மாள் – சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ் பயிற்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 14, 2021

வேலம்மாள் – சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ் பயிற்சி

வேலம்மாள் – சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ் பயிற்சி



வேலம்மாள் – சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ் பயிற்சி

பிள்ளைகள் உயர் படிப்புகளை படித்து சிறந்த பதவிகளை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெற்றோர்களுக்கு உண்டு. மாணவர்களுக்கும் இதுபோன்ற கனவுகள் உண்டு. இத்தகைய கனவுகளை நனவாக்கும் வகையில் 2 முன்னோடி நிறுவனங்கள் ஒருங்கிணைந்துள்ளன.

வேலம்மாள் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு முதன்முறையாக பள்ளிக் கல்வியோடு சமீபத்தில் தொடங்கப்பட்ட எட்டெக் பிளாட்ஃபார்ம் விபி லைவ் (edtech platform VB live) என்ற கல்வித் திட்டத்தை தொடங்கியுள்ளது. தற்போது புகழ்பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கான சிவில் சர்வீஸ் பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குகிறது.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குநர் எம்விஎம் சசிக்குமார், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் எஸ்.டி.வைஷ்ணவி சங்கர் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதுபற்றி அறிய 91 9677147777 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என வேலம்மாள் கல்விக் குழுமம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad