பிபிஇ கிட் அணிந்த முதல்வர் ஸ்டாலின் கோவையில் என்ன செய்தார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 30, 2021

பிபிஇ கிட் அணிந்த முதல்வர் ஸ்டாலின் கோவையில் என்ன செய்தார்?

பிபிஇ கிட் அணிந்த முதல்வர் ஸ்டாலின் கோவையில் என்ன செய்தார்?காலை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுகளை தொடங்கிய முதல்வர் முக ஸ்டாலின் அங்கிருந்து கோவை வந்தடைந்தார். சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு செய்தார்.

கொரோனா பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாக முதல்வர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் தலா 10 கார் ஆம்புலன்ஸ் வீதம், 50 கார் ஆம்புலன்ஸ் வசதியைத் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மருத்துவமனை முதல்வர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழக முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad