மொபைலிலேயே விசா வாங்கிடலாம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

மொபைலிலேயே விசா வாங்கிடலாம்

மொபைலிலேயே விசா வாங்கிடலாம்



துபாய் நவ் (DubaiNow) ஆப்பில் ரெசிடன்சி சேவைகளும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இனி துபாய் நவ் ஆப்பில் பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களுக்கு

துபாய் நவ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, புதிதாக பிறந்த குழந்தைகள், கணவன்/மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு விசா சேவைகள் பெற வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது கூடுதலாக பெற்றோர், தாத்தா பாட்டி, உறவினர் உள்ளிட்டோருக்கும் விசா சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் விசா சேவை மையங்களுக்கு செல்லாமல் மொபைலிலேயே விசா சேவைகளை பெற துபாய் நவ் ஆப் இனி பேருதவியாக இருக்கும்.

விசாவுக்கு விண்ணப்பிப்பது, விசாவை புதுப்பிப்பது, மனைவி அல்லது குழந்தைகளுக்கு ரெசிடன்சி ஸ்பான்சர்ஷிப் ரத்து செய்வது, விசா விண்ணப்ப நிலவரத்தை கண்காணிப்பது, பயண அறிக்கைகளை பெறுவது என பல்வேறு சேவைகளை இந்த ஆப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad