சமூக போராளி டிராபிக் ராமசாமி காலமானார்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

சமூக போராளி டிராபிக் ராமசாமி காலமானார்..!

சமூக போராளி டிராபிக் ராமசாமி காலமானார்..!சட்ட ஆர்வலர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை புரசைவாக்கத்தில் 1934ம் ஆண்டு ஏப்ரல் 1 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் சம்பத். இவரது தந்தை காங்கிரசில் இருந்ததால் முன்னாள் முதல்வர் ராஜாஜி சென்னையில் உள்ள ராமசாமியின் வீட்டுக்கு ஒருமுறை வந்துள்ளார். அப்போது, ராஜாஜி தன்னம்பிக்கையுடன் சமூக பிரச்சினைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று ராமசாமியை பார்த்து கூறியிருக்கிறார்.


கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஊர் காவல் படையில் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் துறையினருடன் சேர்ந்து சேவையாற்றியதால் டிராபிக் ராமசாமி என்று அழைக்க ஆரம்பிக்கப்பட்டார். 1990களில் சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் அதிக அளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படவே, பொதுநல வழக்கு தாக்கல் செய்து ஒரு வழி சாலையாக மாற்றினார்.

அதுபோல சமூக சார்ந்த பல பிரச்சினைகளை பொதுநல வழக்குகள் மூலமாக தீர்த்ததுடன், இளைஞர்கள் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியவர் டிராபிக் ராமசாமி. மக்களை காக்கத்தான் அரசு; மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அல்ல என்று கூறி சாலைகளில் அமைக்கப்படும் கட்சி பேனர்கள், பதாகைகளை கண்ட இடத்திலேயே அகற்றி பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் டிராபிக் ராமசாமி.

No comments:

Post a Comment

Post Top Ad