தடுப்பூசி போட்டுக்கொண்டால் பணம்.. அதுவும் இவ்வளவா? ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பணம்.. அதுவும் இவ்வளவா? !

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பணம்.. அதுவும் இவ்வளவா? !


உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக தாக்கி வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்குவிக்க சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவி நியூ ஜெர்சியில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பீர் வழங்கப்படுகிறது. டெட்ராய்ட்டில் தடுப்பூசி போட நபர்களை அழைத்துவருவோருக்கு 50 டாலர் மதிப்புள்ள பிரீபெய்ட் கார்டு வழங்கப்படுகிறது.

மேரிலேண்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 100 டாலர் (இந்திய மதிப்பில் 7300 ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லேரி ஹோகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். குறிப்பாக, முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு இரண்டாவது டோஸ் போடாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாகாண அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad