பதவியேற்பு விழா எப்போது? அமைச்சரவை பட்டியலுடன் ரெடியான ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

பதவியேற்பு விழா எப்போது? அமைச்சரவை பட்டியலுடன் ரெடியான ஸ்டாலின்!

பதவியேற்பு விழா எப்போது? அமைச்சரவை பட்டியலுடன் ரெடியான ஸ்டாலின்!தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இன்னும் சில தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க தயாராகி வருகிறார். முன்னதாக தனது தேர்தல் வெற்றி சான்றிதழை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காரணமாக பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறும். இதுதொடர்பான அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளியிடப்படும். ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, தமிழக மக்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போதைய வெற்றிக் கணக்கை கருத்தில் கொண்டு அமைச்சரவை பட்டியலில் ஸ்டாலின் சில மாற்றங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காட்டுத்தீ போல பரவி வரும் சூழலில், சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழலில் நிதித்துறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கான சரியான ஆட்களை மு.க.ஸ்டாலின் தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad