'அரசியல் அவ்வளவா தெரியாது'... கிருத்திகா உதயநிதிக்கு போஸ்டிங் பார்சல்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 30, 2021

'அரசியல் அவ்வளவா தெரியாது'... கிருத்திகா உதயநிதிக்கு போஸ்டிங் பார்சல்?

'அரசியல் அவ்வளவா தெரியாது'... கிருத்திகா உதயநிதிக்கு போஸ்டிங் பார்சல்?

திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள திருநங்கைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் சுயதொழில் தொடங்க பயிற்சி தரப்பட்டு வந்தது. இந்நிலையில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும்தொழில் உபகரணங்களை உதயநிதியின் தாயார் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் வழங்கினர்.

அதற்கு பிறகு கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் '' அரசியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடம் கொடுக்கப்பட்டுள்ளதை போல திருநங்கைகளுக்கு அது கிடைக்க வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைக்கிறீர்களா?'' என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி ' நான் அந்த அளவுக்கு அரசியல் பேச மாட்டேன்' என்று சிரித்தபடி பதிலளித்தார். இந்நிலையில், கிருத்திகா உதயநிதியின் பதிலையும், செய்தியாளர் சந்திப்பையும் ஒப்பிட்டு பேசும் நெட்டிசன்கள், அவர் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாக விமர்சித்துள்ளனர்.

செய்தியாளரின் கேள்விக்கு கிருத்திகா சரியான பதிலை அளித்திருந்தால்கூட இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்திருக்காது. காரணம், திமுக இளைஞரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியும் அரசியல் வருகைக்கு முன்பு இதே பதிலைத்தான் பேட்டியில் கூறியுள்ளார். அதுபோல அவரது மனைவியும் அதேபோல பதிலளித்து விமர்சனத்திற்கு வழிவகுத்துவிட்டார். திமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று ஒருகாலத்தில் தலைமை ஆணித்தனமாக கூறிய நிலையில், இளைஞரணி தலைவராக உதயநிதியை அறிவித்தனர். அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படும் என்பத ு உறுதியானது.

அதேபோல சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்கிய உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது '' திமுக ஆரம்பத்தில் இருந்தே குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் முதலில் கைதானதும் நான்தான். எம்எல்ஏ பொறுப்பு என்பது நியமனப்பதவி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. திமுகவில் குடும்ப அரசியல் உள்ளதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். வாரிசு அரசியல் என நினைத்தால் என்னை மக்கள் நிராகரிக்கட்டும்'' என்று கூறினார்.


தொடர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில் கிருத்திகாவின் இந்த பேச்சுக்கு, '' அரசியலில் அவ்வளவு அனுபவம் இல்லை என்று கூறாதீர்கள், உங்கள் கணவரும் அதைத்தான் கூறினார். இப்போது எம்எல்ஏ ஆகிவிட்டார். நீங்களும் அரசியலுக்கு வந்து வருங்காலத்தில் துணை முதல்வராக கூட ஆகலாம். விரைவில் மகளிரணி தலைவராக கூட அறிவிக்கப்படலாம் என்ற லாஜிக் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad