ஸ்டாலினுக்கு செக் வைக்கும் பாஜக: தமிழகத்தில் பலிக்குமா திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

ஸ்டாலினுக்கு செக் வைக்கும் பாஜக: தமிழகத்தில் பலிக்குமா திட்டம்!

ஸ்டாலினுக்கு செக் வைக்கும் பாஜக: தமிழகத்தில் பலிக்குமா திட்டம்!


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, முறைப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று நடைபெறவுள்ளது. தொடர்ந்து அவரது பதவியேற்பு நடைபெறவுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வருகிற 7ஆம் தேதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்காவிட்டாலும், அவரது வீட்டுக்கு படையெடுக்கும் மூத்த அதிகாரிகள் அவரிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் அளிக்கும் ஆலோசனைகளின்படியே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு வருகிறா 5ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கடந்த 2016ஆம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்தே அம்மாநில அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தவர் கிரண் பேடி என்பதும், அதனால், அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண் பேடிக்கும் இடையே மோதல் நிலவி வந்ததும் அனைவரும் அறிந்த விஷயமே.

இதையடுத்து, அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இறுதியில்தான் அந்த அறிவிப்பே வெளியானது. தான் நீக்கப்பட்ட விஷயத்தை தொலைக்காட்சியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டதாக கிரண் பேடியே கூறும் அளவிற்கு அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கிரண் பேடியையோ அல்லது மத்திய பாஜக அரசுக்கு நெருக்கமான ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக நியமிப்பது மூலம், ஸ்டாலினின் செயல்பாடுகளை தடுக்க முடியும் என்று பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனால், புதுச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களின் நிலை வேறு, தமிழகம் போன்ற மாநிலங்களின் நிலை வேறு. எனவே, மாநில அரசுகளின் செயல்பாடுகளை ஆளுநரால் முடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. மாநிலங்களில் ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரம் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உள்ளது என்று அரசியல் விவரம் அறிந்த சில கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad