ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி போட்ட குண்டு: இனி சசிகலா வர வாய்ப்புள்ளதா?
எடப்பாடி பழனிசாமி, சசிகலா என இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முக்கிய காய் நகர்த்தியுள்ளார். மூன்று ஆண்டுகளில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருவதாக கூறுகிறார்கள்.
ஆட்சி பறிபோனாலும் அதிமுகவுக்குள் இப்போதும் எடப்பாடி பழனிசாமியின் கொடிதான் பறக்கிறது. முதல்வர் வேட்பாளர் விவகாரம் கட்சிக்குள் கடந்த ஆண்டு வெடித்தபோது ஓ.பன்னீர் செல்வம் தன்னால் முடிந்த அளவு தம் கட்டிப் பார்த்தார். ஆனால் அமைச்சர்கள், நிர்வாகிகள் என தனக்கான ஆதரவு தளத்தை அதிகரித்திருந்த எடப்பாடியின் முன்னால் ஓபிஎஸ்ஸின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
முதல்வர் என்ற அதிகாரம் கையில் இருப்பதால் நூல் பிடித்தாற்போல் நிர்வாகிகள் அவர் பக்கம் போகிறார்கள், ஆட்சி போனால் ஆட்டம் காண்பார் எடப்பாடி என்றே ஓபிஎஸ் தரப்பு கணக்கு போட்டது. இதே கருத்தைத்தான் சசிகலா தரப்பும் நம்பிக்கொண்டிருந்தது. ஆட்சியை இழந்தாலும் 65 எம்எல்ஏக்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக எதிர்வரிசையில் கம்பீரமாக அமர்ந்துள்ளது அதிமுக. இதுவே எடப்பாடி பழனிசாமியின் வெற்றியாகத் தான் பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த வெற்றி அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியாகவோ, இரட்டை இலைக்கு கிடைத்த வெற்றியாகவோ அல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
No comments:
Post a Comment