நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்த தடை.. அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்த தடை.. அரசு அறிவிப்பு!

நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்த தடை.. அரசு அறிவிப்பு!]

நாடு முழுவதும் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள், லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கிராமப்புறங்களிலும், நகர்ப்புற சேரிகளிலும் உள்ள கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது, “கிராமப்புறங்களில் உள்ள விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும்.


நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படும். தீவிர சிகிச்சை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சமாளிக்க ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் 100 ஐசியூ படுக்கைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

207 சமூக சுகாதார மையங்களில் தலா 30 படுக்கைகள் இருக்கின்றன. அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாக மாற்றப்படும். ஒவ்வொரு மையத்துக்கும் ஐந்து ஐசியூ படுக்கைகள் அமைக்கப்படும். நிமிடத்துக்கு 200 - 300 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஒவ்வொரு சமூக சுகாதார மையத்திலும் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad