தமிழகத்தில் முழு ஊரடங்கு: ஸ்டாலின் பேச்சு - விரைவில் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு: ஸ்டாலின் பேச்சு - விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் முழு ஊரடங்கு: ஸ்டாலின் பேச்சு - விரைவில் அறிவிப்பு!



கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த சில நாட்களாக அமல்படுத்தப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 6ஆம் தேதி முதல் காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி, மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி, இதர கடைகள் அடைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், “பொய்யுரை, புகழுரையை கேட்க நான் விரும்பவில்லை. அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். நமது மாநிலம் இதுவரை சந்தித்திடாத இக்கட்டான சூழலில் தமிழக மக்களை காப்பாற்றும் பொறுப்பு இந்த அரசிற்கு உள்ளது. நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மக்கள் மகிழ்ச்சி அடையும் சூழலை உருவாக்குவோம். ஒரு சில மாவட்டங்களில் தொற்று அளவு கூடுதலாக உள்ளது. இந்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்” என்றார்.


அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அல்லது இம்மாத கடைசி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளாதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad