காவல்துறையிலும் மாற்றம்: கலக்கும் புதிய முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

காவல்துறையிலும் மாற்றம்: கலக்கும் புதிய முதல்வர்!

காவல்துறையிலும் மாற்றம்: கலக்கும் புதிய முதல்வர்!


தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் நேற்றைய தினமே அதிரடி அறிவிப்புகள், கொரோனா தடுப்பு ஆலோசனைகள் என பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டார்.

அரசை வழிநடத்த முதல்வருக்கு நான்கு தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்ச் செயலாளாராக ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்

ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியிலும் சில மாற்றங்கள் நடந்துள்ளன. அந்தவகையில் தமிழ்நாடு காவல்துறை உளவுத் துறை ஏடிஜிபியாக கோவை மாநகர கமிஷ்னர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை நகர காவல் துறை ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் பணியாற்றி வந்த நிலையில் அவருக்குப் பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக இருந்தார்.

சென்னை மாநகர சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த ஜெயந்த் முரளிக்கு பதிலாக பி. தாமரைகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய முதல்வர், புதிய அமைச்சரவை, புதிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என நிர்வாகம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad