அகவிலைப்படி (DA) இம்மாத இறுதியில் வழங்கப்படும் - மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 10, 2021

அகவிலைப்படி (DA) இம்மாத இறுதியில் வழங்கப்படும் - மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

அகவிலைப்படி (DA) இம்மாத இறுதியில் வழங்கப்படும் - மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!


கடந்த 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கான DA மற்றும் DR உயர்வு குறித்து இம்மாத இறுதியில் அதிகாரிகள் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய மூன்று தவணைகளுக்கான DA மற்றும் DR நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய அரசு பல கோடி ருபாய் பணம் லாபமடைந்துள்ளது. இந்த நிலுவைப் பணம் வரும் ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

7 வது ஊதியக் குழுவின் மேட்ரிஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மே 8ம் தேதியன்று நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் இந்த மாத இறுதியில் நடத்தப்படும் என்று ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜே.சி.எம் தேசிய கவுன்சில், ஸ்டாஃப் சைட்டின் செயலாளர் சிவ் கோபால் மிஸ்ரா, அவர்கள் இது தொடர்பாக அரசுடன் ஆலோசிப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஒரே நேரத்தில் மூன்று தவணைகளுக்கான DA மற்றும் DR தொகை வழங்கப்பட முடியாவிட்டாலும், பிரித்து தவணை முறையில் வழங்கப்படும் என்றும் கூறினார். இதனால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் பயனடைவர்கள். அதே நேரத்தில் DA உயர்வுக்கான எந்த ஒரு சலுகையும், ஜூலை 1,2021 முதல் தான் கிடைக்கும். நிலுவை காலத்திற்கு சலுகைகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad