ஆசிரியர்களுக்கு நியாயவிலை கடைகளில் பணி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Teachers List
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் கொரானா வைரஸ் நிவாரண தொகை ரூபாய் 2000 முதல் தவணையாக 15.05. 2021 முதல் வழங்கப்பட உள்ளது
நியாயவிலை கடைகளில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விதிகளை கடைபிடித்து பொருட்களை பெற்று செல்வதை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் செயல்படவும் இதுதொடர்பாக கண்காணிப்பு குழுவின்
தலைவருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித புகார்களும் இடமளிக்காத வகையில் எவ்வித தொய்வும் இன்றி குரானா வைரஸ் நிவாரணத்தொகை வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் உள்ளபடி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து நியாயவிலை கடைகளில் 15.05. 2021 முதல் பணியாற்ற நியமித்து உத்தரவிடப்படுகிறது
அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கோரானா பெருந் தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ள இச்சூழலில் பொதுமக்களுக்கு நிவாரண தொகையான ரூ 4000 அறிவிக்கப்பட்ட நிலையில் , அதில் ரூ 2000 முதல் தவணையாக பொதுமக்களுக்கு வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்ட நிலையில் ,
மேற்கண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் ஆசிரியர் பெருமக்கள் கடந்த ஆண்டு கோரானா பெருந் தொற்று காலத்தில் தமிழகமே வியக்கும் வண்ணம் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த ஆசிரியப் பெருமக்கள்
தன்னார்வலர்கள் ஆக மிகச் சிறப்பாக பணிபுரிந்து பொதுவினியோக கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், கடைகளில் பொருட்கள் சிறப்பாக குறித்த நேரத்தில் வழங்குவதற்கும், சட்டம் ஒழுங்கு வராமல் அமைதியாக நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருந்ததை போலவே, இம்முறையும் வருகின்ற 15.05.2021 சனிக்கிழமை முதல் பொது மக்களுக்கான நிவாரண தொகையான முதல் தவணை ரூ 2000 முகக் கவசம் அணிந்து,சமூக இடைவெளி கடைபிடித்து பொதுவினியோக கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கும்,
இப்பணி தொய்வின்றி குறித்த நேரத்தில் சிறப்பாக நடைபெறுவதைக் கண்காணிப்பதற்கு ஏதுவாக இணைப்பில் கண்ட ஆசிரியர்களை மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். எனவே தன்னலம் கருதாது சிறப்பாக பணிபுரியும் நம் ஆசிரிய பெருமக்கள் தன்னார்வலர்களாக மு க கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, கிருமிநாசினி உடன் வைத்துக்கொண்டு , இம்முறையும் மிகச் சிறப்பாக இப்பணியை 15.05. 2020 முதல் செய்து முடித்திட வேண்டும் என கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment