பெண்களுக்கு தயாராகி வரும் அசத்தல் திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 30, 2021

பெண்களுக்கு தயாராகி வரும் அசத்தல் திட்டம்!

பெண்களுக்கு தயாராகி வரும் அசத்தல் திட்டம்!


முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றத்தில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் அவர் அறிவித்து வருகிறார். கொரோனா நிதி உதவி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறக் கூடிய பெண்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு பெண்கள் வெளியேறுகின்றனர் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மருத்துவர்கள், பெண்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள்” என்றார்.




No comments:

Post a Comment

Post Top Ad