நடிகையுடன் ஹோட்டலில் ரூம்; மருத்துவர் வாக்குமூலம்: வசமாக சிக்கிய மணிகண்டன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 30, 2021

நடிகையுடன் ஹோட்டலில் ரூம்; மருத்துவர் வாக்குமூலம்: வசமாக சிக்கிய மணிகண்டன்!

நடிகையுடன் ஹோட்டலில் ரூம்; மருத்துவர் வாக்குமூலம்: வசமாக சிக்கிய மணிகண்டன்!




அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகையான மலேசியாவை சேர்ந்த சாந்தினி தேவா பாலியல் வன்கொடுமை புகாரை சில நாட்களுக்கு முன்னர் அளித்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அமைச்சர் நெருங்கி பழகியதாகவும்,ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை 3 முறை கலைத்ததாகவும், குற்றம் சாட்டியுள்ள சாந்தினி தேவா, இறுதியில் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதுடன், அடியாட்களை வைத்து தன்னை மணிகண்டன் தாக்கியதாகவும் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நிலையில், அவர் தலைமறைவானார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டனை பெங்களூருவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை முடிந்து அவர் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அவர்கள் சேர்ந்து தங்கியிருந்ததாக தெரிகிறது. இதனால், அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


இதனிடையே, கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவரிடம் அடையாறு மகளிர் காவல்துறை நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தாலேயே நடிகைக்கு கருகலைப்பு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து ஆதாரங்கள் சிக்கி வருவதால், மணிகண்டன் மீதான காவல்துறையினரின் பிடி இறுகுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad