ஐந்து நிமிடத்தில் மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது எப்படி..! Evening Snacks Recipes..! Tea Time Snacks..!
மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:
புடலங்காய் – (வட்டமாக நறுக்கியது)
கான் ஃப்ளவர் மாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி / பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
ஆயில் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
Snake Gourd Recipes: முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கி உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு பவுலில் வைத்திருக்கும் புடலங்காயுடன் கான் ஃப்ளவர் மாவு 2 டீஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.9
Snake Gourd Recipes In Tamil: அடுத்து அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அரிசி மாவு சேர்த்த பிறகு கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவிற்கு அல்லது 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
Evening Snacks: இப்போது எல்லாவற்றையும் கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த பிறகு ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கூட கலந்து கொள்ளலாம்.
Evening Snacks Recipes: அடுத்து கடாயில் பொரித்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெயை ஹீட் செய்து கொள்ளவும்.
5 நிமிடம் இது நன்றாக ஊறிய பிறகு அதிக ஃப்ளேமில் அடுப்பை வைத்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
எண்ணெயில் எல்லாத்தையும் சேர்த்து போடாமல் தனித்தனியாக போட்டு எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment