10 ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகள் வாபஸ் - முதல்வர் உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

10 ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகள் வாபஸ் - முதல்வர் உத்தரவு

10 ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகள் வாபஸ் - முதல்வர் உத்தரவு

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad