தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்!

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்!

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ரயில்வே ஐ.ஜி., சுமித் சரண் ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., தினகரன் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., கயல்விழி, காவல் பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக விஜயகுமார், திண்டுக்கல் எஸ்.பி.,யாக ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை எஸ்.பி.,யாக ரவுளிப்பிரியா, ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் பிரிவு- 2 எஸ்.பி.,யாக ஓம்பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் பிரிவு- 3 எஸ்.பி.,யாக தேவராணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி., சிறப்புப் பிரிவு எஸ்.பி.,யாக விக்ரமன், பரங்கிமலை துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையராக ஷியமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad