17 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் சூப்பர் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

17 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் சூப்பர் தகவல்!

17 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் சூப்பர் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

ஜூலை 25, 26 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.



சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): அவலாஞ்சி (நீலகிரி) 12, பந்தலூர் (நீலகிரி) 7, கூடலூர் பஜார் (நீலகிரி) , நடுவட்டம் (நீலகிரி) தலா 6, சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 5, எமரால்ட் (நீலகிரி), சின்கோனா (கோவை), குந்தா பாலம், (நீலகிரி), க்ளென்மோர்கண் (நீலகிரி), மேல் பவனி (நீலகிரி), தேவலா (நீலகிரி) தலா 4, சோலையார் (கோவை), வால்பாறை (கோவை), வால்பாறை தாலுகா ஆபீஸ் (கோவை) , பொள்ளாச்சி (கோவை) தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வட மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக,

வங்க கடல் பகுதிகள்:

தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் ஜூலை 26ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

No comments:

Post a Comment

Post Top Ad