தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை, 2 ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை, 2 ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை, 2 ஆயிரத்துக்குள் வந்த தினசரி பாதிப்பு


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,39,277 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 26,717 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 536493 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 526504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8302 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 227283 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 222495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,140 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 160762 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 157099 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2388 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,33,149 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,49,62,323 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 2,439 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 24,78,778 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33,782 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad