தமிழகத்தில் 3,000-க்கு கீழே குறைந்த கொரோனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

தமிழகத்தில் 3,000-க்கு கீழே குறைந்த கொரோனா!

தமிழகத்தில் 3,000-க்கு கீழே குறைந்த கொரோனா!



தமிழகத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு, முதன்முறையாக, கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீண்ட நாட்களுக்கு பிறகு, 3 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. புதிதாக 2 ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2 ஆயிரத்து 913 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,672 பேர் ஆண்கள், 1,241 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 174 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad