தமிழ்நாட்டிற்கு மேலும் 3000 பேருந்துகள்: அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

தமிழ்நாட்டிற்கு மேலும் 3000 பேருந்துகள்: அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாட்டிற்கு மேலும் 3000 பேருந்துகள்: அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதியளித்தது. பின்னர் இந்தத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் சேர்த்து விரிவுபடுத்தப்பட்டது.
இந்த திட்டம் மூலம் பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் மூலம் 60 சதவீத பெண்கள் பயனடைவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவுடன் இணைந்து துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “வருவாய்த்துறை, தொழில்துறை, போன்றே போக்குவரத்து துறையும் மிகப் பெரிய துறை தான். தன்னுடைய அனுபவத்தை வைத்து எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்ற தெளிவான சிந்தனையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். மேலும், இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களில் முதலிடத்தில் ஸ்டாலின் உள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் மூலம் 40 சதவீதம் பெண்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அது 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 13 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.ஆனால் தற்போது 14 ஆயிரத்து 217 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad