8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

பிரதமர் மோடி தலையில் இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. யார்யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையே, எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 4 மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்களாக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் விவரம்

1. மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ஹரியாணா மாநில ஆளுநராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. திரிபுரா ஆளுநராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. ஹிமாச்சலப்பிரதேச ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியாணா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்திய அமைச்சர் தாவர்ச்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பாம்பதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



7. மத்தியபிரதேச ஆளுநராக மங்குபாய் ஜகன்பாய் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. ஹிமாச்சலப்பிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad