டோக்கியோ ஒலிம்பிக் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

டோக்கியோ ஒலிம்பிக் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் வெள்ளியுடன் பலத்த போட்டி தொடங்கியது இந்தியா.மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றார். ஸ்னாட்ச் ,கிளீன் &ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வரலாறு படைத்தார்.

ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் மீராபாய் வெள்ளி வென்றுள்ளார்.பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.210 கிலோ எடையை தூக்கி சீன வீரர் ஹோ சி ஹூய் தங்க பதக்கத்தை தட்டி சென்ற நிலையில் அடுத்த இடத்தை மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு பெற்றார்.



No comments:

Post a Comment

Post Top Ad