ஜெயலலிதாவுக்கு எப்போ கோபம் வரும்: மனம் திறந்த சசிகலா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

ஜெயலலிதாவுக்கு எப்போ கோபம் வரும்: மனம் திறந்த சசிகலா!

ஜெயலலிதாவுக்கு எப்போ கோபம் வரும்: மனம் திறந்த சசிகலா!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக, அவரது தோழியாக அவருடனேயே போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்தவர் சசிகலா. சசிகலாவை தன்னுடைய உடன்பிறவா சகோதரியாக, தோழியாக பாவித்தவர் ஜெயலலிதா. இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே.
இன்றைக்கு அதிமுகவில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அதிமுகவில் இருக்கும் பெரும்பாலானோர் சசிகலாவினால் ஏதோ ஒரு வகையில் ஆதாயமடைந்தவர்களாகவே இருக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதாவின் பெயரில் வந்தாலும், அந்த பதவியை பெற்றவர்கள் சசிகலாவின் கண்பார்வை இல்லாமல் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது சாமனிய மக்கள் வரை அறிந்த விஷயமே.

இந்த நிலையில், தொண்டர்களுக்கு பேசும் ஆடியோக்களை வெளியிட்டு வந்த சசிகலா, தற்போது தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுடனான நட்பு பற்றியும், போயஸ் கார்டன் அனுபவம் பற்றியும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.



ஜெயலலிதாவை சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக பொதுவெளியில் இருக்கும் குற்றச்சாட்டு பற்றி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சசிகலா, ஜெயலலிதா யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க மாட்டார். அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்க கூட இருந்ததால கட்டுப்பாட்டில் அவரை வைத்திருந்தோம் என்று சொல்ல முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வராக மக்களுக்கு அனைத்து நல்ல திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர் ஜெயலலிதா. அப்படி ஏதாவது இடையூறான திட்டங்கள் வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார். அதனை அவரது பிடிவாத குணம் என்று சிலர் சொல்வார்கள் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதவை கட்டுக்குள் வைத்திருந்தோம் என்பது பிடிக்காதவர்கள் சொல்லும் கட்டுக்கதை என்று கூறியுள்ள சசிகலா, அத்துடன் ஒரு உதாரணத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்“ எனது கனவர் ஒரு பத்திரிகை வைத்திருந்தார். அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் வருவார்கள். அப்போது உளவுத்துறையை சேர்ந்த காவலர் ஒருவரும் ஒருவரும் வந்திருந்தார். பிஆர்ஓவாக இருந்த எனது கனவருக்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் தெரியும். அப்போது அந்த உளவுத்துறையை சேர்ந்தவரை நீயாருப்பா என்று கூறி கண்னத்தில் தட்டி வெளியே போக சொல்லிவிட்டார். அவர் மாற்றுக் கட்சியை சேர்ந்த அபிமானியாக இருக்கக் கூடும். எனவே, அவரது குடும்பப் பெண்கள் உள்பட பெண்களை திரட்டி அம்மா கோட்டைக்கு போகும் போது போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால், அலுவலகம் போக வேண்டாம் என்று காவல்துறையினர் சொல்லியும், அம்மா கேட்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.



எனக்கு அக்கா என்பதை தாண்டி அவர் மாநிலத்தின் முதல்வர். எல்லோருக்கும் பொதுவானவர் என்பதால் நீங்க அலுவலகம் போக வேண்டும் என்று நான் சொன்னதுடன், இதிலிருக்கும் எதிர்க்கட்சியின் திட்டத்தை உடைக்கும் பொருட்டு எனது கனவரை கைது செய்து விடுங்கள் என்று கூறினேன். எனது கனவரா இருந்தாலும் கண்ணத்தில் தட்டிவது தவறு. உன்மையின் பக்கம்தான் நான் இருப்பேன் என்பதாலும், சதித்திட்டத்தை உடைக்கும்படியும் அப்படி சொன்னேன். அவங்களுக்கு தர்ம்சங்கடமாக இருந்தாலும், அன்று இரவே எனது கனவரை கைது பண்ண சொல்லிட்டாங்க. மறுநாள் போராட்டம் எதுவும் பண்ணவில்லை. அதன்பிறகு மருத்துவமனையில் இருந்த எனது கனவரை சென்று பார்க்க வேண்டும் என்று நான் கூறியதும். உடனே போய்ட்டு வா என்று கூறி, கணவர் என்ற முறையில் அவரை பார்க்கவும் அனுமதி கொடுத்தார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad